அண்ணன் பெருமாள் திருக்கோயில்

ஊர்: திருவெள்ளக்குளம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : அண்ணன் பெருமாள்

தாயார் : அலர்மேல் மங்கை

ஸ்தலவிருட்சம்: வில்வம், பரசு

தீர்த்தம்: வெள்ளக்குள தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: திருப்பதியைப்போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம்

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு

வசிஷ்ட முனிவரை, துந்துமாரன் என்ற அரசன் தன் மகனான சுவேதனை அழைத்து ஆசி பெற சென்றான். அப்போது முனிவரோ மன்னா உன் மகனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என்று கூறினார். இதைக் கேட்ட மன்னன் மனம் நொந்து தன் மகனைக் காப்பாற்றும்படி முனிவரிடம் கேட்டார்.

அதற்கு முனிவர் திருநாங்கூரில் உள்ள குளத்தில் சுவேதன் நீராடி “நரசிம்ம மிருத்யுஞ்ஜய மந்திரத்தை’ சீனிவாசப்பெருமாளிடம் ஒரு மாத காலம் தொடர்ந்து கூறினால் பலன் உண்டு என கூறினார். அவ்வாறே செய்தான் சுவேதன். நரசிம்மர் மந்திரத்தில் மகிழ்ந்து நீ சிரஞ்சீவி ஆவாய் மற்றும் எவனொருவன் இத்தலத்தில் எட்டாயிரம் தடவை இம்மந்திரத்தை கூறுகிறாரோ அவனுக்கு எமபயம் நீங்கப்பெறுவான் என கூறினார்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 39வது திவ்யதேசம். திருமங்கையாழ்வார் “அண்ணா’ என இத்தலப் பெருமானை அழைத்து பாடியுள்ளார். பின்பு திருப்பதியில் உள்ள சீனிவாசப் பெருமாளையும் “அண்ணா” என அழைத்துள்ளார்.

திருப்பதியை போன்றே இத்தல பெருமாளின் திருநாமம் சீனிவாசன், தாயாரின் திருநாமம் அலமேலு மங்கை என பெயர் உள்ளது. திருப்பதியில் உள்ள வேண்டுதலை இத்தளத்தில் நிறைவேற்றலாம் என சொல்லப்படுகிறது. அறுபது, எழுபது மற்றும் என்பதாம் கல்யாணம் செய்து கொள்வது சிறப்பாக உள்ளது.

Recent Post