தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஆப்பிள் சீடர் வினிகர். இவற்றில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரோக்கியமான பானமாக பயன்படுத்தப்படுகிறது. உணவில் ஆப்பிள் சீடர் வினிகரைச் சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வினிகரில் பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது கிருமிநாசினி பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் வளரும் நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும்.

ஆப்பிள் சீடர் வினிகர் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, மேலும் உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து, காலையில் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.

வயிற்று போக்கு பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்து வந்தால் வயிற்று போக்கு பிரச்சனை சரியாகும்.

சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்துக்கு முன் ஒரு ஸ்பூன் தேனில் 5 மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து அருந்துவதினால் மூக்கடைப்பு, சைனஸ், செரிமானம் போன்ற பிரச்சனை சரியாகும்.

Recent Post