ஆரோக்கியம் தரும் அரைக்கீரை சமையல்

அரைக்கீரையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இதனை உணவில் சேர்த்து வரலாம். இந்த பதிவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அரைக்கீரை சமையல் வகைகளை பார்ப்போம்.

அரைக்கீரை தோசை

தேவையான பொருட்கள்

அரைக்கீரை – ஒரு கட்டு

கொத்தமல்லி – ஒரு கட்டு

கடலைமாவு – 1/4 கிலோ

அரிசிமாவு – 50 கிராம்

இஞ்சி – ஒரு துண்டு

நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்

மிளகாய் வற்றல் – 4

சோம்பு – 10 கிராம்

பூண்டு – 6 பல்

வேர்க்கடலை – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

நெய் – 50 கிராம்

செய்முறை

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து அதில் பூண்டு, வெங்காயம், உப்பு
ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும். மேலும், இஞ்சியை அரைத்து, சோம்பை தூளாக்கி, கொத்தமல்லி, மிளகு இரண்டையும் சேர்க்கவும். மிளகாய் வற்றலை அரைத்துச் சேர்க்கவும். வேர்க்கடலையை உடைத்து மாவில் சேர்க்கவும்.

தோசைக்கல்லில் நெய் வார்த்து, மேற்படி மாவைக் கல்லில் ஊற்றி தோசை வார்க்கவும். இந்தத் தோசையை அடிக்கடி சாப்பிட்டால் ரத்த விருத்தி உண்டாகும். இது, புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற உணவு. உணர்வைப் பெருக்கி உறவைச் சிறக்கச் செய்யும் அற்புத உணவு இது.

அரைக் கீரை சூப்

தேவையான பொருள்கள்

அரைக் கீரை – 2 கட்டு

இஞ்சி (தோல் நீக்கியது)

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பூண்டு – 2 பல்

சோம்பு – 1 ஸ்பூன்

லவங்கப்பட்டை – 10 கிராம்

தக்காளி – 5

தேங்காய்த் துருவல் – 2 கைப்பிடி

வெங்காயம் – 5

எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அரைக் கீரையை ஆய்ந்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை 2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்,

இத்துடன் 5 டம்ளர் தண்ணீரைக் கூடுதலாகச் சேர்த்து, அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தட்டிப்போட்டு, கீரையையும் அதில் போட்டு வேகவைக்கவும். கீரை நன்றாக வெந்த பிறகு எண்ணெயில் லவங்கப்பட்டையை தட்டி சேர்த்து தாளிக்கவும்.

Recent Post

RELATED POST