சமீபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் ஒருவர் அரளிப்பூ மற்றும் இலையை லேசாக மென்றதால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரளிப்பூ மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பல வகைகள் காணப்படும். இதில் மஞ்சள் நிற அரளிப்பூ அதிக விஷத்தன்மை கொண்டதாகும். சிவப்பு நிற அரளியில் காற்றை சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளன.
அரளியை சாப்பிட்டால் உடனே கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படும் என்றும் இதனால் உயிருக்கு ஆபத்து என்று கூறப்படுகின்றது. இதனுடைய பூ மற்றும் இலை இவற்றினை சாப்பிட்டாலோ, முகர்ந்து சாப்பிட்டாலோ குமட்டல், டயேரியா, வாந்தி, மயக்கம் ஏற்படும். சில நேரங்களில் மரணமும் கூட நிகழ அதிக வாய்ப்புள்ளது.