ஆரத்தி சாஹாவின் வாழ்க்கை வரலாறு

ஆரத்தி சாஹா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர் 24ல் பிறந்தார். இவருக்கு சிறுவயது முதல் நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும். தனது சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார். இவருடைய தந்தை ராணுவ வீரர்.

தன் மாமாவுடன் ‘சம்பதாளா கேட்’ என்ற இடத்தில் குளிக்கப் போனபோது நீச்சல் கற்றுக்கொண்டார். அன்று தொடங்கிய நீச்சல் பயிற்சி 1959 செப்டம்பர் 29ல் உலக சாதனையாக மாறியது.

இங்கிலீஷ் கால்வாய் 560 கி.மீ. நீளமும், 240 கி.மீ. அகலமும் கொண்டது. கடுங் குளிரும் சுறா மீன்களும் நிறைந்த ஆபத்தான கால்வாய். இதில், மிகவும் தைரியமாக நீந்தி ‘ Mount Everest of Swimming’ என்ற சொல்லும் அளவுக்கு இவரது சாதனை பேசப்பட்டது. இதுவரை 1,341 வீரர், வீராங்கனைகள் இந்தக் கால்வாயைக் கடந்துள்ளனர்.

1945 ம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரை நடைபெற்ற 22 மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். அடுத்து 1952-ல் நடைபெற்ற சம்மர் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டோக்கில் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு 1960ல் இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் இந்திய தபால்துறை இவருக்கு சிறப்புத் தபால்தலை வெளியிட்டு மகிழ்ந்தது. இவருடைய இந்த சாதனை இந்திய மற்றும் ஆசிய இளம் நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளித்தது.

ஆரத்தி சாஹா 1994 ஆகஸ்ட் 23ல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தந்த ஆரத்தி சாஹாவை நினைத்து பெருமை கொள்வோம்.

Recent Post

RELATED POST