இளமையைத் தக்க வைக்கும் நிகரற்ற ஆசனம் அர்த்த மச்சேந்திராசனம். தோள்களைத் திரட்டி உடம்பை அழகு பெறச் செய்யும். வயிற்றுவலியை பறந்ததோடச் செய்யும் ஆசனம்.
அர்த்த மச்சேந்திராசனம் செய்முறை
சித்திர கம்பளத்தில் உட்கார்ந்து இடதுகாலை ‘ட’ போல் மடக்கி கணுக்காலின் மீது உட்கார்ந்து கொண்டு வலது காலை மடக்கி இடதுகால் தொடைக்கு அப்பால் தரைவிரிப்பில் வலது கால் பாதத்தை இடதுகால் தெடையை ஒட்டி வைக்கவும். இடது கை கக்கத்துக்குள் வலது முழங்கால் போகும்படி செய்து இடது உள்ளங்கையால் இடது கால் மூட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
வலது கையை முதுகுக்குப் பின்புறம் கொண்டு வந்து வலது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும். இந்த நிலையே அர்த்த மச்சேந்திராசனம் நிலை ஆகும். பின்னர் சுவாசத்தை வெளியே விட்டுக் கொண்டே வலது பக்கம் நன்றாகத் திரும்பி தலையையும் திருப்பி கண்களால் இடப்புறம் பார்வையைச் செலுத்தவும்.
பின்னர் தலையை இடதுபக்கம் திரும்பி கண்களால் வலது புறம் பார்வையைச் செலுத்தவும். பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இம்மாதிரி இரண்டு, மூன்று முறை செய்யலாம்.
அர்த்த மச்சேந்திராசனம் பலன்கள்
- வயிற்று வலியை போக்க வல்லது.
- முதுகெலும்பை வலுப்படுத்தி இளமை நிலைக்கும்.
- நரம்புகளை வலுப்படுத்தும்.
- கழுத்துப் பிடிப்பு, நரம்பு பிடிப்பு விடுபடும்.
- பிடரி நரம்புகளை வலு பெற செய்யும்.
- கண்களின் பார்வையை தெளிவாக்கும்.
- தோள்களை திரட்டி தேகத்தை அழகுபெறச் செய்யும்.