நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

நீங்கள் சரியான உடல் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்று அறிய ஒரு சின்ன பயிற்சி உண்டு, அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

ஒரு எட்டு அங்குலம் உயரம் உடைய ஸ்டூல் ஒன்றை எடுத்து, அதன் மேலும் கீழும் நிமிடத்திற்கு 24 தடவை என்ற விகிதத்தில் அடியெடுத்து வைக்கவும். இவ்வாறு மூன்று நிமிடம் செய்யவும்.  

பின், சரியாக ஒரு நிமிடம் இளைப்பாறவும், அதன் பின் ஒரு நிமிடத்திற்கான இதயத்துடிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

Advertisement
 இதயத் துடிப்பு பலன்
 100-க்கு மேல் உங்கள் நிலைமை முற்றிலும் சரியில்லை, மருத்துவரை அணுக   வேண்டும்.
 90-99 கவனம் தேவை, பயிற்சிகள் மேற்கொள்ளவும்.
 60-79 அமைதி உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கும்.
 68-க்கும் கீழ் நீங்களே மேன்மையானவர்கள்

இவ்விதம் எச்சரிக்கை செய்திருப்பது யார்? எங்கே தெரியுமா? சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதிகாரப் பூர்வமாக புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்தான் மேற்கண்ட அறிவிப்புகள் உள்ளன.