கூனைப்பூவின் மருத்துவ நன்மைகள்

கூனைப்பூவில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தாவரங்களில் கூனைப் பூவும் ஒன்று.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களோடு இதையும் சேர்த்து பயன்படுத்தினால் மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கும். கூனைப்பூவின் பசுமையான இலைகள் இதய நோய்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.

கூனைப்பூ அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கூனைப்பூவின் இலைச்சாறுகள் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. புற்றுநோய் செல்கள் மேற்கொண்டு வளராமல் கட்டுப்படுத்துகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை வளரவிடாமல் தடுக்கிறது. பித்தப்பை செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. கல்லீரலுக்கு வலுசேர்க்கிறது. இரைப்பையில் செரிமானம் முழுமையாக நடைபெற உதவி புரிகிறது. கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

கூனைப்பூவில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் இனிப்புகள் தயாரிக்கும் கொடி முந்திரிப் பழங்களுக்கு பதிலாக கூனைப்பூவை பயன்படுத்தலாம்.

Recent Post

RELATED POST