ஒருவரின் கர்ம வினைப்படி, அவர்களின் பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை சனி பகவான் அளிப்பார்.
அஷ்டம சனி ஏற்பட்டிருக்கும் நபர்களுக்குக் இரண்டரை ஆண்டு காலம் பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
இந்த காலகட்டத்தில் ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டியது நல்லது. எவற்றை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு காரணங்களுக்காக புதிய வேலைக்கு முயற்சிக்க கூடாது.
புதிய தொழில், பெரிய முதலீடுகள், ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
அநாவசியப் பேச்சை குறைத்துக்கொள்ள வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது.
அஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள்
தினமும் காலையில் குளித்து விட்டு எள் கலந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.
சனிக்கிழமை அன்று வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வணங்க வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ இலை வைத்து வணங்க வேண்டும்.