ஆதிகேசவப்பெருமாள் கோவில் வரலாறு

ஊர் – திருவட்டாறு

மாவட்டம் – கன்னியாகுமரி

மாநிலம் – தமிழ்நாடு

மூலவர் – ஆதிகேசவபெருமாள்

தாயார் – மரகத வல்லி நாச்சியார்

தீர்த்தம் -கடல் வாய் தீர்த்தம், வட்டாறு, ராம தீர்த்தம்

திருவிழா– ஓணம், ஐப்பசி பிரம்மோற்சவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம் – காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 77 வது திவ்ய தேசம் ஆகும். ஒருசமயம் பிரம்மன் யாகம் செய்தார் அதில் ஒரு தவறு நேரிடவே யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றி தேவர்களையும், முனிவர்களையும் பல இன்னல்கள் செய்தனர். ஆகையால் தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் முறையிட்டனர்.

பெருமாளும் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். எனவே கேசியின் மனைவி பெருமாளை பழி வாங்க நினைத்து கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைத்தார்.

அந்த இரு நதிகளும் வேகமாக ஓடி வந்தனர். இதனை அறிந்த பூமாதேவி, பெருமாள் சன்னதி இருக்கும் இடத்தை மேட ஆக்கினால் இரு நதிகளும் பெருமாளை சுற்றி மாலைபோல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர் எனவே இத்தலம் வட்டாறு என அழைக்கப்படுகிறது.

கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவ பெருமாள் என அழைக்கப்படுகிறார். கேசியின் மீது சயணித்தபோது அவனது 12 கரங்களால் தப்புவதற்கு முயன்றான்.

பெருமாள் அவனது 12 கரங்களையும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இதனால் சுற்றி 12 சிவாலயங்கள் அமையப் பெற்றன. மகா சிவராத்திரியின் போது 12 சிவாலயங்களை தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழே உள்ள சிவனையும் தரிசிப்பது வழக்கமாக உள்ளது.

108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன் ஆதிகேசவபெருமாள் தரிசிப்பது சிறப்பு.

இங்குள்ள ஆதிகேசவபெருமாள் கடு சர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கியது இங்குள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசிக்கலாம்.

நடு வாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ளார். பெருமாளின் நாபியில் தாமரையோ பிரம்மனோ இல்லை. இதனால் இவரை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும் புரட்டாசி 3 முதல் 9 வரை சூரியன் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது விழுவது தனிச்சிறப்பு.

Recent Post