அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

அதிமதுரம் பஞ்சாப், காஷ்மீர், ஆகிய இடங்களில் வளர்கிறது. இதனுடைய வேர் பகுதி மருத்துவ குணங்களைக் கொண்டது. இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை.

அதிமதுரம் உடலுக்கு வலிமையை தரும். விந்துவையும் தலைமுடியையும் வளர்க்கும். கண் நோய்கள், விக்கல், வெண்புள்ளி, சிறுநீர் எரிச்சல், எலும்பு நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை அதிமதுரத்திற்கு உள்ளது.

வீக்கம், நஞ்சு, வாந்தி, சோர்வு ஆகியவற்றை தீர்க்கும். குழந்தைகளுக்கு சளி இருமல் தொல்லை இருந்தால் அதிமதுரம், கண்டங்கத்திரி, சிற்றரத்தை, ஆடாதொடா இலை, முசுமுசுக்கை, தூதுவளை, துளசி இலை இவற்றின் பொடிகள் சமபங்கு எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் சளி முறியும்.

அதிமதுரம், சந்தனம் இரண்டையும் பால் விட்டு அரைத்து விழுதாக்கி, பாலில் கலந்து குடித்தால், ரத்த வாந்தி நிற்கும். அதிமதுரத்தை கல்யாண பூசணி சாற்றுடன் அரைத்து விழுதாக்கி மூன்று நாட்கள் பயன்படுத்தினால், கால் வலி, கை வலி நீங்கும்.

படர்தாமரை, காக்கைவலிப்பு, மூக்கில் ரத்தம் வருவது போன்ற பிரச்சனைகளை அதிமதுரம் குணப்படுத்தும். இளமையில் சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் அதிமதுரம் ஒரு அற்புத மருந்து.

அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால், வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.

அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் குடித்து வந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை சாப்பிடலாம்.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இதனால் தொண்டை கரகரப்பு, நாவறட்சி, தொண்டையில் உள்ள சளி நீங்கும்.

அதிமதுரம் சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைவலி முழுமையாக குணமாகும்.

Recent Post

RELATED POST