அவரைக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்

அவரைக்காய் கொடி வகையை சேர்ந்தது. அவரைக்காயில் பிஞ்சு காய் நல்ல சுவையைத் தரும். இதில் உள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளது.

அவரைக்காயுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

மருந்து சாப்பிடுபவர்கள், விரதம் இருப்பவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைத் தரும்.

Advertisement

அவரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் குளிர்ச்சி அடையும். பார்வை மங்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கும். அவரைக்காயில் உள்ள துவர்ப்பு சுவை ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்கும்.

நீரிழிவு நோயால் உண்டாகும் தலை சுற்றல், மயக்கம், கை கால் மரத்துப்போதல் போன்ற பிரச்சனைகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மூலநோய் தாக்கம் உள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சருமத்தில் உண்டாகும் பாதிப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு அவரைக்காய் அற்புதமான மருந்து.

முற்றிய அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் வைத்து அருந்தினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.