குழந்தைகளின் காதுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..?

குழந்தைகளின் ஒட்டுமொத்த உடம்பில், மென்மையான பகுதியாக இருப்பது காதுகள் தான். அவற்றை எப்படி முறையாக பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

குழந்தைகளின் காதுகளை பாதுகாக்க சில டிப்ஸ்:-பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் போன்ற எந்தவொரு பொருட்களையும், கூர்மையான பொருட்கள் எதுவொன்றையும் குழந்தைகளின் காதுகளில் போடக்கூடாது. இவை அனைத்தும் குழந்தைகளின் மிகவும் மென்மையான காதுகளை பாதிக்கக்கூடிய பொருட்கள் ஆகும்.

குழந்தைகள் காதை தடவி தடவி அழுதால், உடனே காதில் என்ன பிரச்சனை என்பதை கவனிக்க வேண்டும். முடிந்த அளவில், மருத்துவரை நாடுவது சிறந்தது.

காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.

குழந்தைகள் குளித்து முடித்த பிறகு, அதன் காதுகளில் சிறிய அளவில் தண்ணீர் புகுந்திருக்கலாம். அவற்றை, சிறிய அளவிலான துண்டை கொண்டு, சுத்தப்படுத்த வேண்டும். குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும்.

Recent Post