எட்டு மாதமாகியும் குழந்தை நடக்கவில்லையா?.. தாய்மார்களே இது உங்களுக்கான செய்தி

குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் ஆன பிறகு, தாய்மார்களுக்கு அதிக சந்தோஷம் தரும் ஒரு நிகழ்வு என்றால், அது நடப்பது தான். ஆனால், தற்போது சில குழந்தைகள் எட்டு மாதம் ஆன பிறகும் கூட நடக்க ஆரம்பிப்பதில்லை. அப்படி ஏதேனும் பிரச்சனை உங்கள் குழந்தைக்கு..? அல்லது உங்களுக்கு நெருக்கமானவரின் குழந்தைக்கு இருந்தால், கீழே தரப்படும் டிப்ஸ்களை பின்பற்றவும்..

குழந்தைகள் எளிதாக நடப்பதற்கான டிப்ஸ்கள்:-

பொதுவாக குழந்தைகள் நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்றால், முதுகெலும்பு, தொடையெலும்பு, மூட்டு பகுதிகள் பலீவனமாக இருப்பதே. இந்த பிரச்சனை தீர்ப்பதற்கு நம் வீட்டிலேயே வைத்தியம் உள்ளது.

புழுங்கல் அரிசியை நன்றாக தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும். பிறகு, அந்த தண்ணீரை, அடுத்த நாள் குழந்தையின் கால், முதுகு, இடுப்பு என்று அனைத்து பகுதிகளிலும் ஊற்றி வர வேண்டும். இப்படி செய்தால், அப்பகுதியில் உள்ள எலும்புகளுக்கு நன்றாக வலிமை கிடைத்து, எப்பேற்பட்ட குழந்தையும் நடக்க ஆரம்பித்துவிடும்.

சாதாரணமாக குழந்தை குளிக்கும் நீரின் வெப்பத்தை விட, சிறிய அளவு கூடுதல் வெப்பத்தோடு அந்த அரிசி ஊற வைத்த தண்ணீர் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை பெற்றோர்கள் நினைவில் வைக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, குழந்தைகளை உட்கார வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது, குழந்தைகளை நிற்க வைத்து பழக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு, குழந்தைகள் வலி தாங்காமல் அழுகும். அப்போது, சிறிது நேரம் இடைவெளி விட்டுவிட்டு, பிறகு மீண்டும் நிற்க வைக்க வேண்டும். இப்படியும் குழந்தை நடப்பதற்கு பயிற்சி கொடுக்கலாம். குழந்தைகள் நிற்காமலே இருந்தாலும், அப்பகுதிகள் பலவீணம் அடையக்கூடும்.

Recent Post

RELATED POST