கெட்ட கொழுப்புகள் வேகமா கரையணுமா? இந்த 3 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

உடல் பருமனால் ஆண்கள் பெண்கள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க பலரும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் 3 உணவுகள் கீழே கொடுப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

கொத்தமல்லி இலை

கொத்தமல்லி இலை நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை ஆரோக்கியமான முறையில் கரைக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம்முடைய உடலில் குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும். எனவே தினசரி உணவில் ஒரு கைப்பிடி அளவாவது கொத்தமல்லி இலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள்

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. மஞ்சள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைத் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. மஞ்சள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது; இன்சுலின் அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் மஞ்சள் கலந்து நீங்கள் அருந்தலாம்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இலவங்கப்பட்டையில் இரண்டு வகை உண்டு. ஒன்று தடிமனான பட்டை, மற்றொன்று சுருள் பட்டை. இந்த சுருள் பட்டையில் தான் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இலவங்கப்பட்டையை டீயாக செய்து காலை வெறும் வெறும் வயிற்றில் குடித்து வர தேவையற்ற கொலஸ்டிரால் வேகமாகக் குறையும்.

இந்த உணவுகளோடு சிறிது உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.

Recent Post