கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பல விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் செய்து வருகிறோம். ஆனால் நம்முடைய சில பழக்க வழக்கங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் பழக்க வழக்கங்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
பாஸ்ட் புட்
பாஸ்ட் புட் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் அதை சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதில் கலோரிகள், கொழுப்பு, சோடியம் அதிகமாகவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாகவும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைகிறது.
காஃபின் நிறைந்த உணவுகள்
ஒரு சிலருக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். மேலும் உங்களின் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்
மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் எப்போதுமே உடல் நலத்திற்கு கேடுதான். எல்லாவிதமான போதையும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதோடு வேறு சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.