அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்

ஊர்: திருமணிமாடக்கோயில்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : பத்ரிநாராயணர்

தாயார் : புண்டரீகவல்லி

ஸ்தலவிருட்சம்: பலா

தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், தை மாதத்தில் கருட சேவை உற்சவம் .

திறக்கும் நேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை.

தல வரலாறு

ஒரு சமயம் சிவபக்தனான தட்சன் அவன் கொண்ட கர்வத்தினால், சிவனையும் தன் மகளான பார்வதியையும் மதியாமல் யாகம் ஒன்று செய்தான். இதை அறிந்த பார்வதி தன் தந்தையிடம் நியாயம் கேட்க சென்ற போது சிவன் அவளை தடுத்தார். தடுத்தும் மீறி சென்றால் பார்வதி. சிவன் கோபம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் ஆடியபோது திருமுடி ஒவ்வொன்றாக விழுந்தது ஒவ்வொன்றும் சிவ வடிவமாக ஆனது.

இதைக்கண்ட மகரிஷிகள் மற்றும் தேவர்கள் அஞ்சி பெருமாளிடம் சென்று சாந்தப்படுத்தும் படி வேண்டினர். பத்ரி நாராயணராக 11 வடிவங்களில் சிவன் முன் தோன்றியவுடன், சிவன் ருத்ர தாண்டவத்தை நிறுத்தினார். பெருமாள் பின் சிவ வடிவங்களை ஒன்றாக்கினார். இங்கு 11 சிவாலயங்கள் 11 பெருமாள் கோயில்கள் உள்ளன. பத்ரி நாராயணரே பிரதானமாக உள்ளார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 32 வது திவ்ய தேசம். இங்கு பத்ரி நாராயணர் அமர்ந்த கோலத்தில் தாமரை மலரின் மீது கால் வைத்தபடி அருள்புரிகிறார். இங்கு அபூர்வமாக ஒன்று நடைபெறுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி படுகிறது.

ஆகையால் இவரை தரிசித்தால் நம் வாழ்வு அனைத்து விதமான பலன்களும் உண்டு என்பது நம்பிக்கை. இங்கு சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. பத்ரிநாராயணர் தன் வாகனமான கருடன் மீது வராமல் தேரில் ஏறி வருகிறார். அதன் காரணமாக இத்தலத்தில் கருடன் கொடிமரத்தின் கீழ் உள்ளார்.

Recent Post