ஆண்களுக்கு விழும் வழுக்கைக்குப் பிரதான காரணம் டெஸ்டஸ்டரோன் என்ற ஹார்மோன். வழுக்கை மரபுக் கூறுகள் உங்களிடம் இருந்தால் பிரச்சனை வலுவடைகிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால் உங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை சமாளிக்கும் ஒரு சில வழிமுறைகளை பார்ப்போம் வாருங்கள்
தலைமுடி உதிர்ந்து சொட்டையானால்,வெள்ளைப் பூண்டு பற்களைத் தேனில் உரைத்து தேய்த்து வர இருபது நாள்களில் முடி வளரத் தொடங்கும்.
ஒரு பங்கு தேங்காய் எண்ணெய்யுடன் கால் பங்கு ஊமைத்தங்காயின் சாறு விட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர தலை முடி உதிராது.சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை தினமும் சொட்டை உள்ள இடத்தில் தேய்த்து வர சொட்டை மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.
இதே போல் தலைமுடி நீளமாக வளர தேங்காய் எண்ணெயை முடியின் வேரில் எண்ணெய் இறங்குமாறு அழுத்தித் தேய்க்க வேண்டும். இது தவிர வாரத்திற்கு இரண்டு நாட்கள் தேங்காய்ப் பாலை தலையில் ஊற வைத்துக் குளிக்க முடி கருமையாகவும், நீளமாகவும் வளரும்.
பூசணியின் கொழுந்து இலைகளை கசக்கி சொட்டை விழுந்த இடத்தில் தேய்த்து வர சொட்டை மறைந்து முடி வளரத் தொடங்கும்.இதே போல் செம்பருத்தி பூக்களை எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, அந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து வர, முடி நீண்டு வளரும்.மூளையும், கண்களும் குளிர்ச்சி பெரும்.தலையில் பொடுகுத் தொல்லையும் வராது.