வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. வாழைப்பழத்தில் டிரைப்டோபன் என்ற அமிலம் ரத்தத்தில் கலந்து மூளையில் செரோட்டனின் என்ற பொருள் சுரக்கிறது. இது மூளைக்கும், நரம்புகளுக்கும் அமைதியான நிலையை கொடுத்து, அதே நேரத்தில் உற்சாகத்தையும் தருவதால் விளையாட்டில் மிகவும் உத்வேகமாக செயல்பட உதவுகிறது.

valaipalam benefits in tamil

காய்ச்சலைப் போக்கும்

வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மாங்கனீஸ் உப்புடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இதனால் உடலில் எந்த ஒரு காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக குணமடைவதற்கு உதவுகிறது. காய்ச்சல் சமயத்தில் இரண்டு அல்லது மூன்று வாழைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

Advertisement

ரத்த அழுத்தம் போக்கும்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் உடலில் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க உதவுகிறது.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்

வாழைப்பழத்தில் அதிகமான மாவு சத்து இருப்பதால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. சிறுநீரக சம்பந்தமாக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்லது

மலச்சிக்கலைப் போக்கும்

மலச்சிக்கலைப் போக்கும் சக்தி பூவன் பழத்திற்கு அதிகமாக உண்டு. மலச்சிக்கல் உள்ளவர்கள் மலை வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் இது உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்வதோடு மலச்சிக்கல், பித்தம், உடல் சூடு போன்றவற்றை போக்குகிறது. இரவு உணவிற்குப்பின் இரண்டு பூவன் பழம் சாப்பிட்டால் இதில் அதிகமாக இருக்கும் நார்சத்து உணவு பாதையை ஆரோக்கியமாக வைத்து சாப்பிட்ட உணவினை ஜீரணமாக உதவி புரிந்து வெளியேற்ற உதவுகிறது.

நெஞ்செரிச்சலை போக்கும்

சில நேரங்களில் சிலருக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண் தொல்லை கொடுக்கும். அவர்கள் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தீர்வு உண்டாகும். சிலர் இரவில் நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுவார்கள், அவர்கள் இரவு உணவிற்கு முன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். உணவு குழாயில் தேவையற்று இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது இதனால் உண்ட உணவு நன்றாக ஜீரணமாகி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

இளமை தோற்றம்

தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் இதில் இருக்கும் பாஸ்பரஸ், நைட்ரஜன் சத்துக்கள் உடலிலுள்ள திசுக்களை மறுசீரமைப்பு செய்து இளமையாகவும், உடல் பலமாகவும் இருக்கும்படி செய்கிறது.

காலை உணவு

காலை நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள முடியாவிட்டால் இரண்டு அல்லது 3 வாழைப் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான மாவுச்சத்தும் புரதச்சத்தும் கிடைத்துவிடுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் மதியம் உணவு எடுத்துக் கொள்ளும்வரை பசியில்லாமல் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொஞ்ச நாட்கள் காலையில் எழுந்தவுடன் தலைசுற்றல், வாந்தி, உடல் சோர்வு மற்றும் மன சோர்வு போன்றவைகள் உருவாகும். இந்த சமயத்தில் அவர்கள் சக்தி இழந்து காணப்படுவார்கள். உடலுக்கு சக்தியை அளிக்க தினமும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் இழந்த சக்தி திரும்ப கிடைக்கும் மேலும் உற்சாகமாக உடல் இருக்கும்.

கண்கள் பாதுகாப்பு

நம் உடலில் மிகவும் முக்கியமான அங்கங்களில் கண்களும் ஒன்று. இதனைப் பாதுகாக்க தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். வாழை பழத்தில் இருக்கும் வைட்டமின் எ சத்து கண் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது மேலும் கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை போக்க

பலர் புகை பிடிப்பதற்கு அடிமையாகி பின்னர் மீண்டு வந்திருப்பார்கள். சில சமயங்களில் புகை பிடிக்கும் எண்ணம் மனதில் உண்டாகும். அந்த சமயத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த எண்ணம் மாறிவிடும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் புகைப்பிடிப்பதால் உண்டான நிக்கோடின் கிருமிகளை உடலிலிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது.

தினமும் மூன்று வாழைப்பழங்கள் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வளமாகவும் வாழ்வோம்.

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடலாமா..?

வாழைப்பழம் சத்து அதிகம் நிறைந்த உணவு தான். ஆனால், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

வாழைப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் இருந்தாலும், அதில் அதிக அளவில் அமிலத்தன்மை உள்ளது. இதனால், வெறும் வயிற்றில், வாழைப்பழத்தை சாப்பிடுவது குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும்.

அமிலத்தன்மை மட்டுமின்றி, வாழைப்பழத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகப்படியாக இருக்கும். இதன்காரணமாக, வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள மக்னீசியம், ரத்தத்தில் கலந்து, கால்சியத்தின் சமநிலையை பாதிக்கும். இதன்காரணமாக, இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வேறு ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு, ஒன்று அல்லது இரண்டு பழங்களை காலையில் சாப்பிட்டால், பிரச்சனைகள் ஏற்படும்.
எதுவும் இல்லை.