வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

வாழைப்பழம் அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவாக பழங்கள் இருக்கிறது. எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் அது நமது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். வாழைப்பழமும் அப்படித்தான்.

வாழைப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் சில பக்க விளைவுகள் உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஒற்றை தலைவலி, சுவாச பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பற்சிதைவு, சோம்பல், வாயுத்தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாகும்.

ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் இருமல், தொண்டை எரிச்சல் போன்ற ஒவ்வாமை ஏற்படும்.

சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை நிச்சயம் குறைக்க வேண்டும். ஏனென்றால் வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும்.

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது.

Recent Post

RELATED POST