வேகமாக தாடி வளர எந்த எண்ணெயை பயன்படுத்தலாம்?

ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதனை முறையாக பராமரிப்பது முக்கியம். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்க சில எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகள் தாடியை மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.

யூக்கலிப்டஸ் எண்ணெய்

யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்து தடவினால் தாடியை வேகமாக வளர்க்க உதவும். இதனை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பிறகு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தாடி நன்றாக வளர்வதற்கு தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்துகொள்ளவும். இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இந்த எண்ணெயை ஸ்பூனில் சிறிதளவு ஊற்றி லேசாக சூடு செய்து தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்தவுடன் தாடியை கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

‘டீ -ட்ரீ’ எண்ணெய்

‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். தாடியை அடர்த்தியாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும். இந்த எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. 50 மி.லி பாதாம் எண்ணெயோடு 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து சிறிதளவு எடுத்து தாடியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தாடியை கழுவிவிட வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் தாடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளிக்கும்.

Recent Post

RELATED POST