கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பீட்ருட் பயன்படுகிறது. பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்த முடியும்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பிறகு, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உங்கள் முகம் ஜொலிப்பதை காணலாம்.
2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள பருக்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸுடன் சர்க்கரை கலந்து, அதனை கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்குவது காணமுடியும். இதனை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வரவேண்டும்.
பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி நீங்கும்.