வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது.
சிரிப்பதால் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது.
நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
வாய் விட்டு சிரிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் மூளையில் எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.
நீண்ட நேர சிரிப்பு உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகள் நீக்க பயன்படுகிறது. மேலும் ஜீரணிக்கும் நீர் சுரப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.