கத்தரிக்காயில் உள்ள மருத்துவக் குணங்கள்

சில காய்கறிள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் கிடைக்கும், சில காய்கறிகள் வருடம் முழுவதும் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. அதைப் பிஞ்சாகவும் சமைத்துச் சாப்பிடலாம். முற்றிய நிலையிலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், கத்தரிக்காயைப் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய நிலையில் சாப்பிட்டால் சிலருடைய உடலில் அரிப்பு ஏற்படக்கூடும்.

வீட்டிலேயே கத்தரிக்காய்ச் செடியை வளர்க்கலாம். அப்போது நாமே கத்தரிக்காயைப் பிஞ்சாக இருக்கும்போது பறித்துச் சாப்பிட வசதியாக இருக்கும்.

கத்தரிக்காயில் புரதம். கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியோமின், நிகோடினிக் அமிலம் போன்றவை உள்ளன. இவை நூறு கிராம் கத்தரிக்காயில் இருபத்து நான்கு கலோரி கிடைக்கிறது. கத்தரிக்காய் சிறப்பான மருத்துவக் குணத்தைப் பெற்றிருக்கிறது.

குரல் வளம் வேண்டும் என்று விரும்பும் பாடகர்கள், மேடைப் பேச்சாளர்கள், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் போன்றவர்க்ள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாத நோய்கள், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, கத்தரிக்காய் பொரியல் போன்றவற்றை தயாரித்துச் சாப்பிட்டால் நோய்களின் கடுமை வேகமாகக் குறையும். சில நாட்களில் நோய்களும் குணமாகிவிடும்.

பித்த நோய்களாலும் சளித் தொல்லையாலும் பாதிக்கபட்டவர்கள் ஓருநாள்விட்டு ஓருநாள் கத்தரிக்காயை சேர்த்துக்கொண்டால் பித்த நோய் குணமாகும், சளித் தொல்லையும் நீங்கும்.

கத்தரிக்காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஒரு மாத காலம் உணவில் கத்தரிக்காயை அதிகமாக சேர்த்துக் கொண்டால் அது ஊளைச் சதைக் கரைத்து உடல் எடையை குறைக்கும்.

முற்றிய கத்தரிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு அளவோடு கொடுப்பது நல்லது. இது உடல் வளர்ச்சிக்கும் கண்பார்வைக்கும் ஏற்றது.

குளிர்காலத்தில் கத்தரிக்காயை சேர்த்தக் கொண்டால் அது வெப்பத்தை தந்து உடல் கதகதப்பாக இருக்க உதவும்.

உடம்பில் சொறி சிரங்கு உள்ளவர்களும், உடலில் புண் உள்ளவர்களும் கத்திரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.

Recent Post

RELATED POST