சுவை அதிகம் கொண்ட பருப்பு வகைகளில் முந்திரி பருப்புக்கென்று ஒரு தனி இடம் உண்டு. முந்திரிப் பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது.
முந்திரி பருப்பில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, ஜிங்க்ஆகியவை உள்ளது.
முந்திரிப் பருப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும். சரியான அளவில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும்.
முந்திரி பருப்பில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
முந்திரிப் பருப்பில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.
முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு சத்து உள்ளதால் நரை முடி பிரச்சனை வராமல் தடுக்கிறது.
முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க முந்திரிப்பருப்பு உதவுகிறது.
வாரம் இருமுறை முந்திரிப் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருப்பதோடு உடல் எடை குறையவும் உதவி செய்கிறது.