தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

இளநீருக்கும் தேங்காய் தண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தப்பதிவில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தேங்காய் தண்ணீர் சுவையாக இருப்பதோடு உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது.தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.

சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும். சளி இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் தடுக்கும்.

தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். சிறுநீரக கற்கள் இருந்தால் அதனை கரைத்து வெளியேற்றும். தொடர்ந்து ஏழு நாட்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எடையை குறைக்க பயன்படுகிறது. மது அருந்திவிட்டு காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி உண்டாகும். அதனை தடுக்க தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் தலைவலி நீங்கும்.

தேங்காய் தண்ணீரில் கொழுப்பு தன்மை குறைவாக இருப்பதால் எவ்வளவு அருந்தினாலும் உடலில் கொழுப்பு சேராது. பசி உணர்வு அடங்கும். தண்ணீர் தாகம் நீங்கும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை குடித்து வந்தால் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து தைராய்டு சீராக செயல்பட வைக்கும்.

Recent Post

RELATED POST