மதிய உணவில் தயிர் இல்லையென்றால் அது முழுமையான விருந்தாக இருக்காது. அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால் இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தயிரில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களை உறுதியாக்கும்.
ஒரு கை தயிர் எடுத்து அதனை தலையில் தேய்த்தால் நன்றாக உறக்கம் வரும்.பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் புரோட்டீன் குறைவாக உள்ளதால் விரைவாகவே ஜீரணமாகிவிடும்.
தயிர் உடலுக்கு குளிர்ச்சியையும் நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. தயிர் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் 91% தயிர் ஜீரணமாகியிருக்கும். ஆனால் பால் சாப்பிட்டால் 32% மட்டுமே ஜீரணமாகியிருக்கும்.
பாலை தயிராக மாற்றுவதற்கு பயன்படும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமிகளை அளிக்கிறது. மேலும் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.
தயிர் உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றில் உருவாகும் தேவையற்ற உபாதைகளை சரி செய்கிறது.
வயிற்றுபோக்கு இருந்தால் சிறிது வெந்தயம் + தயிர் 1 கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
மெனோபாஸ் பருவத்தை அடையவிருக்கும் பெண்களுக்கு தயிர் மிகவும் பயனயளிக்கிறது. ஏனென்றால், உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் புரோட்டீன் அதிகம் இருப்பதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது.