வெந்தய தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பொருள்களில் வெந்தயம் முக்கியத்துவம் வாய்ந்தது. வெந்தயத்தில் கலோரிகள் குறைவாகவும் நார் சத்து அதிகமாகவும் உள்ளது. மேலும் விட்டமின் ஏ, புரோட்டின், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது. 

இரவில் படுக்கும் போது வெந்தயத்தை நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த நீரோடு வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக பல நோய்கள் காணாமல் போகும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கும். மேலும் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரையும்.
 
மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளம் வயதில் இருதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதை தடுக்க தினமும் வெந்தய நீரை குடித்து வந்தால் இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். 

வெந்தயம் தொண்டை புண் மற்றும் காய்ச்சலிருந்து விடுவிக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெந்தயம் சாப்பிடுவதால் முடி கொட்டும் பிரச்சனையை முற்றிலும் நீக்கும். 

பெண்கள் வெந்தய நீரை குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை பிடிப்பு, வயிற்று வலியை சரி செய்யும்.

நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கல்லீரலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் முழுவதும் ரத்தம் சீராக பாய உதவுகிறது. வெந்தயம் சிறுநீரக கற்களை தடுத்து, மேலும் கற்களை உருவாகாமல் தடுக்கிறது. 

எனவே வெந்தய தண்ணீரை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பாருங்கள். அதன் மருத்துவ குணத்தை நீங்களே உணர்வீர்கள்.

Recent Post

RELATED POST