வெந்நீரில் குளிப்பது நல்லதா? எண்ணெய்க் குளியல் பயன்கள் என்ன?

சிறு குழந்தைகள் பெரும்பாலும் குளிப்பதற்கு அடம் பிடிப்பார்கள். அதற்கு பெரியவர்கள் கொஞ்சி விளையாடி அவர்களை குளிக்க வைப்பார்கள். நாமும் அதே போல தான் சிறுவராக இருக்கும்போது செய்திருப்போம். பெரியவர்களான பிறகு நாம் தினம் தினம் குளித்து விடுகிறோம்.

பொதுவாக ஆற்றில், கிணற்றில் குளிப்பவர்கள் மிகவும் சந்தோஷமாக குளிப்பார்கள். அதற்குத்தான் நீராடுதல் என்று அழைப்பார்கள். நகரப்புறங்களில் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

நம் தோல்கள் மீது தூசி அழுக்கு படிந்து இருக்கும், மேலும் நமது உடலில் உள்ள முடி கண்கள் வழியாக உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. நாம் தினமும் குளிக்காவிட்டால் அது நம் தோல் மீது படிந்து துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள்

எண்ணெய் குளியல் பொதுவாக ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் குளிக்க வேண்டும். காரணம் சனி அசதியையும், சோம்பேறித்தனத்தையும் கொடுக்கவல்லது. சனிக்கிழமைகளில் பொதுவாக சுப நிகழ்ச்சிகள் நடத்த மாட்டார்கள். அந்த நாளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால், உடல் அசதி கொடுக்கும் நன்றாக உறக்கம் வரும் நன்றாக உறங்கினால் உடலுக்கு ஆரோக்கியமானது.

அதேபோல் பெண்களுக்கு சுக்கிரனின் ஆசி அதிகம் தேவைப்படும். ஆகையால் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

எண்ணெய்க் குளியல் பயன்கள்

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறைகிறது. தோல் மிருதுவாகிறது. இளநரையும், பொடுகும் தவிர்க்கப்படும். முடி கருப்பாக நன்கு வளரும். நல்ல தூக்கம் வரும். கண் எரிச்சல் குணமாகும்.

தினமும் குளிக்கும் போது சிறிது எண்ணெயை தலைக்கு வைத்துக் குளிப்பது நல்லது. எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் காய்ச்சி தேய்த்து குளிப்பது நல்லது.

நல்லெண்ணெயில் மிளகு, ஓமம், இஞ்சி, வெந்தயம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிப்பது நல்லது. சளி தொல்லை இருக்காது.

எண்ணெய் குளியல் வெந்நீரில் குளிப்பதுதான் நல்லது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று தாம்பத்தியம் கூடாது.

வெந்நீர் குளியல் பயன்கள்

பொதுவாக வெதுவெதுப்பான இதமான தண்ணீர்தான் அனைவருக்கும் ஏற்றது. கோடைகாலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும்.

வெந்நீரில் குளித்தால் மன இறுக்கத்தை போக்கி அமைதியை கொடுத்து நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும். வெந்நீரில் குளிப்பதால் தசை வலிகள், கை கால் வீக்கங்கள், மூட்டு வலிகள் (arthritis) போன்ற நோய்கள் குணமாகும்.

ஒருநாளைக்கு இருமுறை குளிப்பவர்கள் காலையில் மிதமான தண்ணீரிலும், இரவில் வெந்நீரில் குளிப்பது நல்லது.

செய்யக்கூடாதவை

சாப்பிடுவதற்கு முன் தான் குளிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது. ஏனென்றால் உடல் சூடு குறைந்து சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாது. இதனால் வயிற்று பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு.

சளி, கண் நோய், காது நோய், பேதி போன்ற நோய்கள் இருக்கும்போது குளிப்பதை தவிர்ப்பது நல்லது. ஈரமான தலையில் எண்ணெய் தேய்பது, தலை வாருவது கூடாது. முடி உடைய வாய்ப்புண்டு.

இது போன்று மருத்துவம் குறிப்புக்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Recent Post

RELATED POST