கொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவனை சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த சிறுவனை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மையம் நாகரத்பேட்டை என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வந்த 17 வயதுச் சிறுவனை, கொரோனா சோதனைக்கு அழைத்தனர். ஆனால் சிறுவன் வர மறுத்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் அந்தச் சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இந்த வீடியோ வைரலாக பரவியதால் சிறுவனைத் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.