கல்லீரலை பாதுகாக்கும் வீட்டு உணவுகள்

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பாகும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிக முக்கியம். கல்லீரலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் உணவுகளை பற்றி பார்ப்போம்.

பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்து சாப்பிடலாம். அல்லது சூப் செய்து குடிக்கலாம். இதனால் கல்லீரல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை, கல்லீரல் வீக்கம் இரண்டுமே குணமாகும்.

முருங்கைக் கீரை சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்றாக செயல்படும். தயிர், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும்.

பப்பாளி பழம்

பப்பாளி பழம் கல்லீரல் நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இரண்டு ஸ்பூன் பப்பாளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். தினமும் 3 கப் க்ரீன் டீ குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

நார்த்தம் பழம்

நார்த்தம் பழத்தில் ‘நாரின்ஜெனின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இது கல்லீரலில் உருவாகும் கொழுப்பை கரைக்கும். மேலும் கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கச் செய்யும்.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்:

  • வாய் துர்நாற்றம்
  • சோர்வான கண்கள்
  • செரிமான பிரச்சனை
  • வெளுத்துப்போன சருமம்
  • மஞ்சள் நிற கண்கள்
  • வாய்க்கசப்பு
  • வயிறு வீக்கம்

இவையெல்லாம் கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள்.

சிகரெட், மதுப்பழக்கம் போன்றவை கல்லீரலை பாதிக்கும். எனவே அந்த பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.

Recent Post

RELATED POST