வீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்

மரங்கள் பொதுவாக பூமிக்கும் மனிதர்களுக்கும் நன்மையே அளிக்கின்றன. அதனால்தான் அரசு வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க ஊக்குவிக்கிறது. வீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்

வேப்பமரம்

வேப்ப மரம் வளர்ப்பதால் இருக்குமிடத்திற்கு குளிர்ச்சி தருவதோடு அதிக ஆக்சிசனை தருகிறது. மேலும் மருத்துவ குணங்கள் இருப்பதால் நோய்கள் அண்டாமல் இருக்கும். வேப்பம் இலையினை நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால் இது ரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும். இதைப் போலப் மரத்தின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

முருங்கை மரம்

வேப்பமரம் அருகில் முருங்கை மரத்தில் வைக்கலாம். இது அனைத்து காலகட்டத்திலும் உங்களுக்கு முருங்கை இலை முருங்கைப்பூ, முருங்கைக்காய் போன்றவற்றை உங்களுக்கு வழங்கும். அவசர காலகட்டத்தில் இது உங்கள் உணவிற்கு உதவும். மருத்துவ குணங்கள் நிறைந்தது. முருங்கை இலைகளில் இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை நீங்கும்.

வாழை மரம்

குளிக்கும் இடத்தில் அருகில் வைப்பது நல்லது. ஏனென்றால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்காது. ஆகையால் வாழைமரம் அதனை சுத்தப்படுத்தும். மேலும் வாழை இலை, வாழைப்பழம், வாழைக்காய், வாழை தண்டு போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.

தென்னை மரம்

தென்னைமரம் உச்சி முதல் பாதம் வரை அனைத்து நன்மை பயக்கும். இளநீர் தேங்காய் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானது.

எலுமிச்சை மரம்

வீட்டு வளர்ப்பதால் தீய சக்தி அண்டாது. மேலும் எலுமிச்சை கனிகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, தெய்வீக சக்திக்கும் பயன்படுகிறது.

கருவேப்பிலை மரம்

எலுமிச்சை மரத்தினடியில் கருவேப்பிலை மரத்தினை வைக்கலாம். கருவேப்பிலை உணவுக்குப் பயன்படுவதோடு, கண்களுக்கும் முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.

நெல்லி மரம்

நெல்லி மரம் வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த இடத்தையும் வராது.

சீதா மரம்

சிதம்பரம் வீட்டில் இருப்பது அல்லது இது வாஸ்து மரம் என்று கூறப்படுகிறது மேலும் சீத்தாப்பழம் உடலுக்கு ஆரோக்கியமானது.

பப்பாளி மரம்

பப்பாளி இலையின் சாற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. பப்பாளி பழம் உடலுக்கு நல்லது.

மாமரம்

மாமரம் கொடுக்கும் மாம்பழம், மாங்காயில் அதிக சத்துக்கள் உள்ளது. மா இலையில் தெய்வீகத்தன்மை உள்ளது.

Recent Post