பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

பத்ராசனம் செய்முறை

தரைவிரிப்பில் அமர்ந்து இரு கால்களையும் முன் பக்கமாக இழுத்து, இரு கணுக்கால்களையும் ஒன்றின் மேல் ஒன்றிருக்க குறுக்காய் மாற்றிப் போட்டு இருக்கச் செய்து அதன் மேல் உட்கார வேண்டும், இரு பாதங்களும் ஒரு பக்கம் தரையில் படும்படியும், மற்றொரு பக்கம் ப்ருஷ்ட பாகத்திற்கு வெளியே காணப்படும்.

இவ்வாறு வெளியே காணப்படும் இரு பாதங்களின் பக்கங்களையும் கைகளால் அமுக்கிப் பிடித்து அமரவேண்டும். பாதங்கள் சிறிதும் அசைவின்றி இருக்க வேண்டும்.

உடல், முதுகு வளையாமல் நிமிர்த்தி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கணுக்கால்களில் வலிதோன்றிலாலும் பழகப்பழக வலி தோன்றாது. நிதானமாக சுவாசிக்க வேண்டும். இதுவே பத்ராசனம் ஆகும்.

பத்ராசனத்தின் பலன்கள்

  • நோய்கள் அணுகாது
  • உடலைப் பாதுகாக்கும்
  • விஷங்களை நசிக்கச் செய்யும் ஆற்றல் மிக்க ஆசனம்.