ஊர் -திருநின்றவூர்
மாவட்டம் -திருவள்ளூர்
மாநிலம் -தமிழ்நாடு
மூலவர் -பக்தவச்சலப் பெருமாள்
தாயார் – என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
தலவிருட்சம் -பாரிஜாதம்
தீர்த்தம் -வருண புஷ்கரணி
திருவிழா -பங்குனியில் திருவோண விழா ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திரு நட்சத்திரங்கள் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் தீபாவளி திருக்கார்த்திகை வைகுண்ட ஏகாதசி மாசிமகம் தைப்பொங்கல் ரதசப்தமி
திறக்கும் நேரம் -காலை 7 30 மணி முதல் பகல் 11 30 மணி வரை மாலை 4 30 மணி முதல் இரவு 8 30 மணி வரை
தல வரலாறு
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 59 வது திவ்ய தேசம் ஆகும். பெருமாளிடம் சண்டையிட்டுக் கொண்டு வைகுண்டத்தை விட்டு “திரு’வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் “திருநின்றவூர்’ ஆனது.
அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானப்படுத்தி அழைத்து பார்த்தார், லட்சுமி வர மறுத்ததால், பெருமாளிடம் சென்று தேவியை அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே பெருமாள் நீ முன்னே செல், நான் பின்னால் வருகிறேன் என்றார். சமுத்திர ராஜனும் முன்சென்று தாயாரிடம், நான் உனக்கு தந்தை அல்ல நீயே “என்னைப்பெற்ற தாய்” எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய் என வேண்டினார்.
பின் பெருமாளும் சமாதானம் செய்ததால் வைகுண்டம் சென்றால் மகாலட்சுமி. பக்தனின் வேண்டுதலை ஏற்று பெருமாள் இங்கு வந்ததால் “பக்தவச்சலன்” என திருநாமம் பெற்றார். சமுத்திரராஜன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமண கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.
திருமங்கையாழ்வார் பல தலங்களுக்கு சென்று மங்களாசாசனம் செய்து இவ்வழியே வந்தபோது இத்தலத்தை பாடவில்லை. எனவே தாயார் பெருமாளிடம், ஆழ்வாரிடம் சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு கூறினார். ஆனால் ஆழ்வரோ வெகுதூரம் சென்று விட்டார். அங்கு சென்று பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்று கேட்டதால், எம்பெருமாளே தன்னை தேடிவந்து பாடல் கேட்டு பெருமை படுத்தியதை நினைத்து பாடல் ஒன்று பாடினார்.
அப்பாடலை பெற்று வந்து தாயாரிடம் கொடுத்தபோது எல்லா தளங்களுக்கும் பத்து பாடல்கள் குறையாமலிருக்கும் இத்தளத்திற்கு மட்டும் ஏன் ஒரு பாடல் தானா? எனக்கேட்டார். பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் சென்று பாடல் பெறுவதற்குள் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார்.
திருமங்கையாழ்வார் கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் நிற்பதை தன் ஓரக்கண்ணால் பார்த்து அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார். ஆதிசேஷனுக்கு என தனி சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் ராகு கேது மற்றும் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்று சொல்லப்படுகிறது.