இது பாம்பு போன்ற தோற்றமும், தண்டால் பயிற்சியின் பலனையும் தரும். இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயரும் உண்டு.
புஜங்காசனம் செய்முறை: தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொண்டு, உள்ளங்கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும். சுவாசத்தை உள்இழுத்து பின் மெதுவாக வெளியிட்டு தலையை மேலாக தூக்கி நிமிரவும்.
தொப்புளிருந்து கால்கள் வரை தரையில் பதிந்தவாறு வைத்து, கைகளை முழுவதுமாக நிமிர்த்தாமல் முதுகை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து இதனை பழக வேண்டும். தலையை பின்புறமாக சாய்த்து கண்கள் மேல்விட்டத்தைப் பார்க்க வேண்டும்.
சுவாசத்தை சாதரணமாக இழுத்து கொள்ளவும். இறங்கும் போது மெதுவாக மூச்சை எடுத்துக் கொண்டே இறங்க வேண்டும். இதுவே புஜங்காசனம்.
புஜங்காசனத்தின் பயன்கள்
- மார்பு விசாலமாக்கும்
- புஜங்களை வலுவாக்கும்
- மார்புச் சளியை போக்கும்
- முதுகெலும்பை வலுவாக்கும்
- தண்டுவடத்தை திடப்படுத்தும்
- குதிங்கால் நோய்கள் அணுகாது