“நல்லா தூங்குங்க” – தூக்கத்தை பற்றி பில்கேட்ஸ் சொல்வது என்ன தெரியுமா?

காலம் ஓடும் வேகத்தில், சிலர் சரியாக இரவில் உறங்குவதில்லை, அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர். இரவு முழுவதும் கண் விழித்து தனது கனவுக்காக உழைத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இப்போது தான், தூக்கத்தின் நன்மைப்பற்றி உணர்ந்து அதனை பின்பற்றுகிறார்.

அவர், சொன்னது என்ன?, நல்ல தூக்கத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

பில்கேட்ஸ், விடுமுறையில் படிக்க வேண்டிய அவருக்கு பிடித்த புத்தகங்கள் பற்றி சமுக வலைத்தளங்களில் வெளியிடுவார், அதைபோல், சமிபத்தில் பில்கேட்ஸ் வெளியிட்ட புத்தக வரிசையில், நாம் கவனிக்கவேண்டிய புத்தகம் மத்தேயு வாக்கர் எழுதிய ‘நாங்கள் ஏன் தூங்குகிறோம்’ என்ற புத்தகம்தான்.

இந்த புத்தகம் விளக்குவது என்னவென்றால், சரியான உறக்கம் இல்லாவிடில், படைப்பாற்றல், சிக்கலை திர்க்கும் திறமை, கற்றல், முடிவெடுக்கும் திறமை, இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், மன ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி, ஆயுட்காலம் போன்றவற்றை குறைக்கிறது என தெரிவிக்கிறது.

இதனை, தற்போது உணர்ந்து கொண்ட பில்கேட்ஸ் அதனை செயல்படுத்துகிறார், மேலும் இதனை இளைஞர்கள் செயல்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.

பிட்பிட் என்ற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், உலகிலேயே தூக்கமின்மை மிகுந்த இரண்டாவது இடத்தில் இந்தியர்களும், முதலிடத்தில் ஜப்பானியர்களும் உள்ளதாகவும் கூறுகின்றது. இந்நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 10.5 பில்லியன் மக்கள் இரவு தூக்கத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின் படி, இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் 7 மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே தூங்குகிறார்கள். சராசரியாக ஒருவர் 6 மணி நேரம் 47 நிமிடங்கள் மட்டுமே தூங்கக்கூடிய ஜப்பானியர்கள் தூக்கமின்மையில் முதலிடத்தில் உள்ளனர். அதேபோல் அயர்லாந்து மக்கள் 7 மணிநேர 57 நிமிடங்கள் தூங்குபவர்களாக உள்ளனர்.

நம்மில் பலருக்கு தூக்கத்தின் அருமை தெரியாமல் இருக்கிறது. நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு மேலே குறைகிறது என்று குறிப்பிட்ட அனைத்தும் ஒருவர் வாழ்வில் மீண்டும் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, ஆகையால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறங்குவோம். வாழ்வில் வெற்றிப்பெறுவோம்.

Recent Post

RELATED POST