6 சிறுமிகளுக்கு ஆபாச படம் காட்டிய பாஜக நிர்வாகி கைது

மயிலாடுதுறையில் 6 சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த மகாலிங்கம் என்கிற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக நிர்வாகியாக இருக்கும் மகாலிங்கம் (வயது 60) மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர். 6 சிறுமிகளிடம் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.