விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

கருப்பு பெட்டி என்பது விமான விபத்துகள் குறித்த உண்மைகளை கண்டறிய விமானங்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு மின்னனு சாதனமாகும். 1949 ஆம் ஆண்டில் பிரிட்டனை சேர்ந்த ஹவிலேண்ட் என்ற நிறுவனம் உலகின் முதல் ஜெட் விமானத்தை இயக்கியது. அதன் பிறகு 1954 வரை 7 ஜெட் விமானங்கள் விபத்துகளில் சிக்கியது.

இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் 1954 ஆம் ஆண்டு கருப்பு பெட்டியை கண்டுபிடித்தார். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.

கருப்பு பெட்டிகள் பொதுவாக டைட்டானியம் அல்லது எஃகு மூலம் இரட்டை அடுக்காக உருவாக்கப்பட்டிருக்கும். இது கடினமான மற்றும் அசாதாரண நிலைகளில் கூட தாங்கக் கூடியவை. கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.

அதிக நெருப்பு, உப்புநீர், உயர் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து விதமான சூழ்நிலைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு கருப்பு பெட்டிகள் இயங்கும். விபத்தின் போது எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஒளிரக் கூடிய ஆரஞ்சு நிறத்தில் கருப்பைகட்டிகள் வடிவமைக்கப்படுகிறது.

விமானம் குறித்த முழுமையான தரவுகள், சூழ்நிலை, விமானம் தரையில் இறங்கிய வேகம் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும். இந்த கருப்பு பெட்டி விமானத்தின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும்.

கருப்புப் பெட்டியில் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர், காக்பிட் குரல் ரெக்கார்டர் என்ற இரண்டு விதமான கருவிகள் இருக்கும். டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரில் விமானத்தின் உயரம், எரிபொருள் ஓட்டம் மற்றும் வானியல் குறித்த தரவுகளை பதிவு செய்யும். காக்பிட் குரல் ரெக்கார்டரில் காக்பிட்டில் நடக்கும் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படக்கூடிய அனைத்து வித ஒலிகளையும் பதிவு செய்யும்.

பெரும்பாலான விமான விபத்துக்களில் கருப்புப் பெட்டிகள் விசாரணை அதிகாரிகளின் கையில் சிக்கி விடும். விமான விபத்து விசாரணைகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த கருப்பு பெட்டி எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கும்.

Recent Post

RELATED POST