முடி உதிர்வை முழுவதுமாக நிறுத்தும் கருஞ்சீரக எண்ணெய்

கருஞ்சீரக எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் நல்லது. கருஞ்சீரக எண்ணெயை நேரடியாக உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி இல்லாத சமயத்தில் கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு உபயோகிக்கலாம்.

கருஞ்சீரகத்தில் 100 வகையான சத்துக்கள் இருக்கின்றன. இவை கூந்தலுக்கு தேவையான போஷாக்கு அளிக்கிறது. அத்துடன் கூந்தல் அடர்த்தியாக வளரும் தூண்டுகிறது. மேலும் இது தலைமுடி செல்களில் உள்ள மெலனின் சுரப்பை தூண்டுவதால் முடி உதிர்வதை அடியோடு நின்றுவிடும்.

கருஞ்சீரகத்தில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் அவை கூந்தல்பகுதிகளில் ஏற்படும் செல் சிதைவு தடுக்கிறது. இதனால் பலவீனமான முடி உருவாவதை தடுக்கிறது. எனவே இங்கு சொல்லப்பட்டிருப்பது படி கருஞ்சீரகத்தை தொடர்ந்து ஒரு மாதம் உபயோகித்தால் போதும் கூந்தல் வளர்ச்சி அருமையாக இருப்பதை நீங்கள் காணலாம்.

கருஞ்சீரகத்தில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்கள் மிரிஸ்டிக் அமிலம், பாமிட்டிக் அமிலம், ஸ்மரிக் அமிலம், ஒலியிக் அமிலம், லனோலியிக் அமிலம், ஒமேகா 6 பேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் உள்ளன, மேலும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B1, வைட்டமின்கள் B2 போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

கருஞ்சீரகத்தின் பலன்கள்

அஜீரணம், இருமல், வாந்தி, வாயு, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும். பசியைத்தூண்டும், வயிற்றுப் போக்கை நிறுத்தும், புழுக்கொல்லியாக செயல்படும். இதயத்தில் உண்டாகும் வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். முகப்பருவை அறவே நீக்கும். கரப்பான், சொறி,சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களை தீர்க்கும்.

பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகம் சுரக்க வைக்கும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் வழிகளை குறைக்கும், கீல் வாதம், தலைவலி, நாய் கடி, கண் வலி, கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்கு கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

சிறுநீரகக் கல்லைக் கரைத்து, சிறுநீர் அடைப்பை அகற்றும், தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை குணப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

Recent Post

RELATED POST