சருமத்திற்கு நன்மை தரும் கருப்பு மிளகு எண்ணெய்

கருப்பு மிளகு எண்ணெயை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தக்கூடாது. பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

கருப்பு மிளகு எண்ணெயில் ஆன்டி-வைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குவதோடு சருமத்தை சுத்தம் செய்கிறது. மேலும் சருமத்தில் இருக்கும் நுண்ணுயிர்களை நீக்குவதால் தோல் நோய்கள் மற்றும் ஒவ்வாமையை குணப்படுத்தும்.

சருமத்தில் குவிந்திருக்கும் கூடுதல் எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களை கருப்பு மிளகு எண்ணெய் நீக்கிவிடும். உங்கள் சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்க கருப்பு மிளகு எண்ணெய் பயன்படுகிறது. இது உங்களுக்கு மென்மையான மற்றும் இளமையான சருமத்தை தரும்.

சருமத்தில் சுற்றி உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்த கருப்பு மிளகு என்னை உதவுகிறது. சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உங்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.

Recent Post

RELATED POST