பிளாக் டீ உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். தினமும் ப்ளாக் டீ குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி ஆரோக்கியம் மேம்படும். இந்த பிளாக் டீயுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
உடல் பருமன் மற்றும் தொப்பை
உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் பிளாக் டீயுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
தோல் புற்றுநோய்
பிளாக் தேநீர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது தோல் புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது. எலுமிச்சை சாற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றைத் தடுக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது உடலில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும். எனவே தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பிளாக் டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
செரிமான பிரச்சனை
சிலருக்கு அடிக்கடி செரிமான பிரச்சனை வரும். பிளாக் டீ அனைத்து செரிமான பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. இது அனைத்து வகையான வயிற்று பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.