மனித உடலில் ரத்தம் மிக மிக முக்கியமானது. ரத்தத்தை நாம் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
பீட்ரூட்
ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையை அழிக்கும் சக்தி பீட்ரூட்டில் உள்ளது. இதில் பீட்டாலைன்கள் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. பீட்ரூட் செரிமான கோளாறுகளை நீக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். பீட்ரூட் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
தண்ணீர்
தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும். உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். தண்ணீர் அருந்துவதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மஞ்சள் ஒரு சக்தி நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது. உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை எதிர்த்து போராடும். ஒரு கப் சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
துளசி உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். துளசி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. துளசி சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். துளசியை தேநீரில் போட்டு பருகலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தேவையற்ற கழிவுகள் வெளியேறும். ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்.
பூண்டு
உணவில் அடிக்கடி பூண்டு சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
இஞ்சி
இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
வாழைப்பூ, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். மேலும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.