உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் சில பேர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறவில்லை என கவலை கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க இயற்கையான சத்தான உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நேந்திரம் பழ துண்டுகளுடன் தேன் சேர்த்து, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும். பசும்பால், பசு வெண்ணை இரண்டும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். பகலில் நேரம் கிடைக்கும்போது தூங்குவது நல்லது.

காலையிலும் மாலையிலும் பாலில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

காலை மற்றும் இரவில் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடையை அதிகரிக்க தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வாருங்கள். இது உடல் எடையை அதிகரிக்க உதவும். மேலும் உடலுக்கு இரும்பு சத்தும் கிடைக்கும்.

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வாருங்கள் இதனால் உடல் எடை அதிகரிக்கும். மேலும் உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன், வைட்டமின், நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைக்கும்.

வெண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே மாதத்திற்கு ஒருமுறை வெண்ணெய் சாப்பிடுவது நல்லது.

உலர் திராட்சையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இதை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கும்.

Recent Post

RELATED POST