தற்போதைய வாழ்க்கை முறையில் குறைந்த வயதிலேயே எலும்புகள் பலவீனமாகிறது. இதனால், பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எலும்புகள் விரைவில் பலவீனம் ஆவதை தடுக்க நாம் ஒரு சில பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தூக்கமின்மை
மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் என்பது மிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லையென்றால் எலும்புகள் பலவீனமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சூரிய ஒளி
வலுவான எலும்புகளுக்கு சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் சூரிய ஒளி நம் மீது படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
புகைபிடித்தல்
புகைப்பிடிப்பது எப்போதுமே உடல் நலத்திற்கு ஆபத்துதான். புகைப்பிடிப்பது நுரையீரலை மட்டுமல்ல, உங்கள் எலும்புகளையும் பாதிக்கிறது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள்.
உப்பு
உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும். உப்பு அதிகம் சேர்ப்பதால் உங்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும்.