பாலுட்டும் அம்மாக்களுக்கு சில டிப்ஸ்

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் அழகு கெடும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் அழகு ஒரு போதும் கெடுவதில்லை.

குழந்தைக்கு முதல் ஐந்து மாதங்களுக்குக் கண்டிப்பாகத் தாய்ப்பால் புகட்ட வேண்டும். இரட்டைக் குழந்தைகள் உள்ளவர்களும், சிசேரியன் ஆபரேஷன் செய்யப்பட்டவர்களும் கூட பாட்டில் பாலை நாடாமல் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்து கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், தாயின் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு பாலாக மாறிவிடுவதால் உடல் பெருப்பதில்லை.

தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பப்பை நன்றாகச் சுருங்கி அதன் இடத்திற்கு வருவதால் வயிறு நன்றாகச் சுருங்கி பழைய தோற்றத்தை அடையலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அடுத்த குழந்தை சீக்கிரம் உண்டாவதில்லை,

தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

  • முதல் நான்கு ஐந்து மாதங்களுக்குக் குழந்தையின் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைத் தருவதில் தாய்ப்பாலுக்கு நிகர் வேறு இல்லை.
  • குழந்தைக்கு தேவையான புரோட்டின், கொழுப்பு, வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவை சரியான விகிதத்தில் தாய்ப்பால் மூலம் கிடைக்கிறது.
  • குழந்தைக்குத் தேவையான வெப்பநிலையில் பால் சுரப்பதால் எளிதில் ஜீரணிக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • பவுடர் பாலும், பசும்பாலும், தாய்ப்பாலுக்கு நிகர் ஆகாது.
  • குழந்தை புத்தி கூர்மையுடன் செயல்படும்.

Recent Post

RELATED POST