மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வெயில் காலங்களில் தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக மோர் குடித்து வந்தால் அது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். மோர் குடிப்பதால் உடலுக்கு எந்த விதமான தீமைகளும் ஏற்படாது. இது தாகத்தை தணித்து உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மோரில் MFGM என்னும் பயோ ஆக்டிவ் புரோட்டீன், கொலஸ்ட்ராலை எதிர்க்கும் பொருள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் சாப்பிடும் உணவுகளில் காரம் அதிகமாக இருந்தால் வயிறு எரிச்சல் ஏற்படும். இதனை தவிர்க்க ஒரு டம்ளர் மோர் அருந்தினால் போதும். மதிய உணவில் மோர் சேர்த்துக் கொண்டால் அது மிக எளிதாக செரிமானம் ஆகிவிடும்.

மோருடன் சிறிது இஞ்சி சீரகம் சேர்த்து குடித்து வந்தால் வயிறு உப்புசம் சரியாகிவிடும். மோரில் வைட்டமின் பி2 அதிகம் இருப்பதால் இது கல்லீரல் நன்றாக செயல்பட வைக்கிறது. மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி உள்ளுறுப்புகளை தூய்மைப்படுத்துகிறது.

மோரில் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. கோடைகாலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். மோரில் புரதச் சத்து அதிகம் இருப்பதால் இது உடலில் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். மோர் சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைகிறது.

அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஒரு டம்ளர் மோரில் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து குடித்தால் அசிடிட்டி பிரச்சனை சரியாகிவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, ரத்தப் போக்கை சமாளிக்க ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் சரியாகும்.

கடைகளில் விற்கப்படும் மோர் பாக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே தயிரை கடைந்து மோர் தயாரித்து அதில் கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கப்படும் மோர் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Recent Post

RELATED POST