ஒட்டகத்தை பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

Camel Facts in Tamil : ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் ஒரு தாவர உண்ணி. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் ஒட்டகங்களை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துகின்றனர். ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முழுமையாக வளர்ந்த ஒட்டகங்கள் 3 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும் இருக்கும். பாக்ட்ரியன் ஒட்டகங்கள் 300 முதல் 1000 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். ட்ரோமெடரி ஒட்டகங்களின் எடை 300 முதல் 600 கிலோ வரை இருக்கும்.

ஒட்டகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். 200 கிலோ வரையிலான எடையைச் சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது.

மூன்று வகையான ஒட்டகங்கள் உயிருடன் உள்ளன. ட்ரோமெடரி, பாக்ட்ரியன் மற்றும் காட்டு பாக்ட்ரியன். இதில் காட்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள் சிறிய சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன. இந்தியாவில் 80% ஒட்டகங்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் உள்ளன.

ஒட்டகங்கள் பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. ஒட்டகத்தால் சுமார் 375 முதல் 600 பவுண்டுகள் சுமக்க முடியும்.

ஒட்டகங்கள் வாரக்கணக்கில் தண்ணீர் அருந்தாமல் இருக்கும். பிறகு ஏறத்தாழ 100 லிட்டர் அளவுக்கு தண்ணீரை குடிக்கும்.

ஒட்டகத்தின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடும் வெப்பத்திலும் 8 நாட்கள் வரை நீரின்றி உணவின்றி வாழும். கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரை கூட இருக்கும்.

பாலைவன நாடோடிகளின் பிரதான உணவாக ஒட்டகப்பால் இருந்து வருகிறது. சோமாலியா, சவுதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளில் ஒட்டக இறைச்சி உண்ணப்படுகிறது.

பசும்பாலை விட ஒட்டகப்பாலில் கொழுப்பு மற்றும் பிளாக்ரோஸ், பொட்டாசியம்,இரும்பு, வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. டயாபிடீஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒட்டகப்பால் சிறந்தது.

Recent Post

RELATED POST