கர்ப்ப காலத்தில் தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கர்ப்ப காலத்தில் ப்ளாக்பெர்ரி பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பல பெண்களுக்கும் இருக்கும்.
ப்ளாக்பெர்ரி பழத்தில் கருவின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துத்துக்கள் நிறைய இருக்கின்றன. கர்ப்பிணிகளுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இதை தாராளமாக சாப்பிடலாம்.
ப்ளாக்பெர்ரியில் உள்ள நார்ச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
வயிற்றில் வளரும் கருவின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து அதிகளவில் ப்ளாக்பெர்ரியில் உள்ளதால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
ப்ளாக்பெர்ரியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்பிணி பெண்களின் எலும்புகளை வலுப்படுத்தி, பிரசவத்தை எளிதாக்குகிறது.