வெண்டைக்காய் மருத்துவ குணம் நிறைந்த காய்கறியாகும். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் எடை இழப்பிற்கும் உதவுகிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெண்டைக்காய் சிலருக்கு விஷமாக மாறக்கூடும். எனவே, வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது என்பதை பார்ப்போம்.
அலர்ஜி
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் அரிப்பு, தடிப்பு, கொப்புளங்கள், மூச்சு திணறல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது.
செரிமான பிரச்சனை
மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்களும் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது, ஏனெனில் இது அவர்களின் பிரச்சனைகளை மோசமாக்கக்கூடும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.