பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

இந்திய உணவு வகைகளில் பூண்டு என்பது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக உள்ளது. இதில் உள்ள காரமான சுவை உணவின் சுவையை அதிகரிக்க செய்து உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தருகிறது.

பொதுவாக, பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இரத்தத்தில் கொழுப்புச்சத்து அல்லது பிற கொழுப்புகள் அதிகமாக உள்ளவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

Also Read : பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்ட பிறகு, செரிமான அசௌகரியம் உணர்ந்தால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அஜீரணம், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகள் வரும். 

பூண்டை பச்சையாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சிறிது நேரம் கழித்து தலைவலி வர வாய்ப்புள்ளது. பச்சை பூண்டு சாப்பிடுவதால் யோனி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. 

Also Read : தினமும் ஆண்கள் வறுத்த பூண்டை அவசியம் சாப்பிடணும்..ஏன் தெரியுமா?

பூண்டு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது பெரிய அளவில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

Recent Post